திமுக கவுன்சிலர் தற்கொலை முயற்சி.. திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் பரபரப்பு.!! - Seithipunal
Seithipunal


திருச்சி மாநகராட்சியின் மாதாந்திர கூட்டம் இன்று நடைபெற்றது. இன்று காலை 11 மணிக்கு கூட்டம் தொடங்கியதும் கவுன்சிலர்கள் தங்கள் வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள பிரச்சினை குறித்தான கோரிக்கைகளை முன்வைத்தனர். 

அப்போது 60வது வார்டு திமுக கவுன்சிலரும் அமைச்சர் நேருவின் ஆதரவாக கருதப்படும் விஜய் ஒவ்வொரு மாதமும் தனது வார்டு பிரச்சனைகளை முன்வைப்பதாகவும் ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் குற்றம் சாட்டி தனது ராஜினாமா கடிதத்தை மாநகராட்சி கூட்டத்தில் இருந்து வெளியேறினார். 

பின்னர் தான் வைத்திருந்த பெட்ரோலை உடல் மீது ஊற்றிக்கொண்ட திமுக கவுன்சிலர் விஜய் தற்கொலைக்கு முயன்றார். அதனை கண்ட சக கவுன்சிலர்கள் தடுத்து நிறுத்தி அவர் மீது தண்ணீர் ஊற்றினர். இதனால் திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMK counsellors suicide attempt in Trichy corporation office


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->