கழிவு நீர் வசதி | திமுக பெண் கவுன்சிலரை "தட்டி" கேட்ட 3 பேர் மீது வழக்கு! - Seithipunal
Seithipunal


திண்டுக்கல் : கழிவு நீர் வசதி, சாலை வசதி செய்து தராத திமுக பெண் கவுன்சிலரை தாக்கிய மூன்று பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம், அம்மையநாயக்கனூர் பேரூராட்சியில் 6-வது வார்டு தி.மு.க. கவுன்சிலராக இருப்பபவர் சத்யா (வயது 40).

சம்பவம் நடந்த அன்று, தனது சொந்த ஊரான பொம்மணம்பட்டியின் ஒரு தெருவில் சாலை அமைக்க நடைபெற்ற சர்வே பணியை காண  கவுன்சிலர் சத்யா சென்றுள்ளார்.

அப்போது கவுன்சிலர் சத்யாவிடம் அந்த தெருவைச் சேர்ந்த சரவணன், பாண்டிராஜ், பாண்டிராஜ் மனைவி சண்முகவடிவு ஆகியோர் கழிவுநீர் வசதி ஏற்படுத்தி கொடுத்துவிட்டு, பின்னர் சாலை போடுங்கள் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

அதற்க்கு சத்யா முடிந்தால் பார்க்கலாம் என்று தெரிவிக்க, இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

பின்னர் ஒரு கட்டத்தில் கவுன்சிலர் சந்தியாவை தகாத வார்த்தையால் திட்டிய, சரவணன் தரப்பு, தாக்குதல் நடத்தி, கொலை மிரட்டல் விடுத்ததாக சொல்லப்படுகிறது. 

மேலும், இந்த தாக்குதலில் காயம் அடைந்த சத்யா நிலக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 

மேலும், சம்பவம் குறித்து அம்மையநாயக்கனூர் போலீசார் 3 பேர் மீது வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMK Counselor Sathya attack case


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->