திமுக அரசுக்கு கண்டனம்! பா.ஜ.க தலைவர் அண்ணாமலை பதிவு! - Seithipunal
Seithipunal


மத்திய அரசு கர்பிப்பிணிப் பெண்களின் நலனுக்காக வழங்கும் நிதியை, தமிழ்நாடு அரசு முடக்கிக்கொள்வதாக தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்:

இதுகுறித்து அண்ணாமலை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ''கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் கர்ப்பிணிப் பெண்களின் நலனுக்காக மத்திய அரசின் மாத்ரு வந்தனா திட்டம்,  செயல்பட்டு வருகிறது. 

தமிழகத்தில் 1987 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகின்ற டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி திட்டத்துடன் இணைந்து, கர்ப்பிணிப் பெண்களுக்கு 5 தவணைகளாக ரூ.14,000 மற்றும் ரூ.4000 மதிப்புள்ள ஊட்டச்சத்துப் பெட்டகமும் வழங்கப்படுகிறது.

இந்த திட்டத்தில் வழங்கப்படும் நிதி உதவியில் மத்திய அரசு 60 சதவிகிதம் வழங்கப்படும். கடந்த 5 ஆண்டுகளில், மத்திய அரசு இந்தத் திட்டத்தின் கீழ் தமிழகத்துக்கு ரூ.257 கோடி நிதி வழங்கியுள்ளது. 

இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக பல்வேறு காரணங்களை தெரிவித்து, இந்த நிதியை  
கர்ப்பிணிப் பெண்களுக்கு வழங்குவதில்லை. இந்த ஊழல் திமுக அரசை, தமிழக பாஜக சார்பில் வன்மையாக கண்டிக்கிறேன். 

தமிழகத்தில் ஊழல் திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து, மக்களுக்கு வழங்கப்படும் நலத்திட்டங்கள் ஒவ்வொன்றாக முடக்கப்பட்டு வருகின்றன. 

அதில் மகளிருக்கு வழங்கப்பட்டு வந்த தாலிக்கு தங்கம் திட்டத்தை நிறுத்தினார்கள். மேலும் பட்டியல் பிரிவு மக்களுக்காக மத்திய அரசு வழங்கிய பல ஆயிரம் கோடி நிதியைப் பயன்படுத்தாமலேயே திருப்பி அனுப்பினார்கள். 

தமிழக பள்ளி மாணவர்களைத் தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளுக்கு அனுமதிக்காமல் அவர்களது வாய்ப்புகளைப் பறித்தார்கள். அரசு மாணவர் விடுதிகளுக்கான அடிப்படை வசதிகளை நிறைவேற்றாமல் புறக்கணித்து கொண்டிருக்கிறார்கள். 

தற்போது, கர்ப்பிணிப் பெண்களுக்கான நிதியுதவித் திட்டத்தையும் கடந்த 2 ஆண்டுகளாக முடக்கியுள்ளனர் என்று தெரிய வந்துள்ளது. அப்படி என்றால், மத்திய அரசு கர்ப்பிணிப் பெண்களுக்கு ஒதுக்கும் நீதி கிடைக்கவில்லை என்றால், அந்த நிதி எங்கே செல்கிறது. 

கர்ப்பிணிப் பெண்களை அலைக்கழிக்கும் இந்த ஊழல் திமுக அரசு உடனடியாக அவர்களுக்கான நல நிதி உதவிகளை வழங்க வேண்டும், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் குழந்தைகளின் ஆரோக்கியத்தில் விளையாடக் கூடாது'' என அண்ணாமலை வலியுறுத்தியுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMK government condemnation BJP president Annamalai


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->