திமுக உறுப்பினர் ரவிக்குமார் எப்படி விசிக-வின் பொதுச்செயலாளராக இருக்கலாம்? தகுதி நீக்கம் செய்க - பாஜக தரப்பில் போர்கொடி!
DMK MP Ravikumar issue BJP Side Condemn
கடந்த 2019 ஆம் ஆண்டு தேசிய மக்கள் சக்தி கட்சி தலைவரும் வழக்கறிஞருமான ரவி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொலைந்திருந்தார்.
அவரின் அந்த அந்த வழக்கில், "கடந்த மக்களவைத் தேர்தலில் விழுப்புரம் தொகுதியில் விடுதலை சிறுத்தை கட்சியை சேர்ந்த ரவிக்குமார், திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்று மக்களவை உறுப்பினராக உள்ளார்.
தேர்தல் நடத்தை விதிமுறைகளின் படி, விதிகளின்படி ஒரு கட்சியின் உறுப்பினராக இருப்பவர், அந்த கட்சியில் இருந்து விலகாமல், மற்றொரு அங்கீகரிக்கப்பட்ட கட்சியின் சின்னத்தில் போட்டியிடுவது சட்டவிரோதம்.
ஒரு கட்சியின் மிகப்பெரிய பொறுப்பை வகித்துக் கொண்டு, மற்றொரு கட்சியின் சின்னத்தில் போட்டியிடுவதற்கு சட்டத்தில் இடமும் இல்லை. எனவே திமுக உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற வீசிக பொதுச்செயலாளர் ரவிக்குமாரின் வெற்றியை செல்லாது என்று அறிவிக்க வேண்டும்" என்று கோரிக்கை வைத்திருந்தார்.
இந்த வழக்கில் விழுப்புரம் திமுக எம்பி ரவிக்குமார் சென்னை உயர்நீதிமன்றத்தில் அளித்த பதில் மனுவில், "நான் திமுக உறுப்பினர் தான். மனுதாரர் நான் விடுதலை சிறுத்தை கட்சியை சேர்ந்தவன் என்ற அனுமானத்தில் என் பேரில் மனுவை தாக்கல் செய்துள்ளார்.
மக்களவைத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் என்பது திமுக உறுப்பினர் என்ற அடிப்படையில் தான் வழங்கப்பட்டுள்ளது. திமுக உறுப்பினர் என்பதற்கு ஆதாரமாக திமுக உறுப்பினர் பட்டியலில் எனது பெயர் உள்ளது. அதற்கான அடையாள அட்டையும் என்னிடம் உள்ளது" என்று தெரிவித்திருந்தார். இந்த வழக்கிற்கு பின்னும் திமுக எம்பி ரவிக்குமார் தன்னை விசிக எம்பி என்று சொல்வதை தவிர்த்து வருகிறார்.
இந்த நிலையில், விசிக விருது வழங்கும் நிகழ்ச்சிக்கான அழைப்பிதழில், திமுக அடிப்படை உறுப்பினராக உள்ள திமுக எம்பி ரவிக்குமாரை விசிக பொதுச் செயலாளர் என்று அச்சிடப்பட்டு உள்ளனர்.
இதுகுறித்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில், பாஜகவின் மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி தனது ட்விட்டர் பக்கத்தில் ரவிக்குமாரை தகுதி நீக்கம் செய்யப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
அவரின் அந்த செய்திக்குறிப்பில், "நீதிமன்றத்தில்,தான் திமுக உறுப்பினர், அக் கட்சியின் சார்பாக தான் மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றதாக பிரமாண பத்திரம் தாக்கல் செய்த ரவிகுமார் அவர்களை வி சி க பொது செயலாளர் என பதிவிட்டிருப்பது சட்ட விரோதம். உடனடியாக ரவிகுமார் அவர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட வேண்டும்" என்று நாராயணன் திருப்பதி தெரிவித்து உள்ளார்.
English Summary
DMK MP Ravikumar issue BJP Side Condemn