போலி சான்றிதழ் தயாரித்து பண மோசடியில் ஈடுபட்ட திமுக நிர்வாகி உள்பட இருவர் கைது.!  - Seithipunal
Seithipunal


போலி சான்றிதழ் தயாரித்து பண மோசடியில் ஈடுபட்ட திமுக நிர்வாகி உள்பட இருவர் கைது.! 

சென்னையில் உள்ள திருவல்லிக்கேணி லால்முகமது தெருவைச் சேர்ந்தவர் பிரேம்ராஜா. திருவல்லிக்கேணி பகுதியில் திமுக கட்சியில் பொருளாளராக பதவி வகித்து வரும் இவருடைய நண்பர் பெரம்பூரைச் சேர்ந்த பிரேம்நாதன். இவருடைய வீட்டில் ஜிஎஸ்டி அதிகாரிகள் கடந்த மாதம் 20-ம் தேதி மோசடி வழக்கு ஓன்றில் கைது செய்து விசாரணை நடத்தினர். 

அதில், திமுக நிர்வாகி பிரேம்ராஜா அதிக நேரம் பிரேம்நாதனுடன் செல்போனில் பேசியது தெரியவந்தது. இதையடுத்து ஜிஎஸ்டி அதிகாரிகள் பிரேம்ராஜா வீட்டில் சோதனை நடத்தி அவரை ஜிஎஸ்டி அதிகாரிகள் விசாரணைக்கு அழைத்து சென்றனர். 

அங்கு அவரிடம் நடத்திய விசாரணையில் பிரேம்ராஜா மற்றும் அவரது நண்பர் பிரேம்நாதன் இருவரும் சேர்ந்து போலியாக ஐடிசி எனப்படும் உள்ளிட்டு வரிச்சான்றிதழ் தயாரித்து மோசடியில் ஈடுபட்டதும், இவர்கள் 59 போலி கம்பெனிகள் பெயரில் ரூ.175.88 கோடி வரிக்கான போலி உள்ளிட்டு வரிவரவைச் சான்றிதழ் தயாரித்து மோசடியில் ஈடுபட்டதும் தெரிய வந்தது.

அதுமட்டுமில்லாமல், இந்த மோசடிக் கும்பல் சிறப்பு மென்பொருள், வெளிநாட்டு சிம்கார்டுகள், மற்றும் தனியாக செல்போன்களைப் பயன்படுத்தி, நிறுவனங்களுடன் தொடர்பு கொண்டு பில் தொடர்பான பரிவர்த்தனைகளை மேற்கொண்டது தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து, ஜிஎஸ்டி புலனாய்வு பிரிவு அதிகாரிகள் மோசடியில் ஈடுபட்ட இருவரையும் இன்று கைது செய்துள்ளனர். திமுக நிர்வாகி போலிச் சான்றிதழ் தயாரித்து மோசடியில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dmk sipporters arrested for money fraud in chennai


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->