அமெரிக்காவின் கோல்டு கார்டு திட்டம்: ஒரே நாளில் 1000 பேர் விசா பெற்றுள்ளனர்..! - Seithipunal
Seithipunal


அமெரிக்கா அதிபராக டிரம்ப் பதவியேற்றத்தில் இருந்து  பல்வேறு அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.அந்தவகையில், அமெரிக்காவில் புதிதாக குடியேறுபவர்களுக்கு டிரம்ப் புதிய கோல்டு கார்டு திட்டம் ஒன்றை அறிவித்துள்ளார். இதனையடுத்து ஒரே நாளில் ஆயிரம் பேர் கோல்டு கார்டு திட்டத்தின் கீழ் விசா வாங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறி உள்ளவர்களை கண்டறிந்து நாடு கடத்தும் பணியும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அமெரிக்காவில் புதிதாக குடியேறுபவர்களுக்கு புதிய கோல்டு கார்டு திட்டம் ஒன்றை கடந்த பிப்ரவரி மாதம் அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்தார்.

இதன்படி புதிதாக குடியேறுபவர்களுக்கு 05 மில்லியன் டாலர்களுக்கு (இந்திய மதிப்பு படி ரூ.43 கோடி) கோல்டு கார்டு விற்கப்படும் எனவும், இந்த அட்டை கிரீன் கார்டின் பிரீமியமாக இருக்கும் என அவர் தெரிவித்தார். இந்நிலையில் இது குறித்து அமெரிக்க அதிபர் மாளிகையான ஓவல் அலுவலகத்தின் வர்த்தக செயலாளர் ஹோவர்ட் லுட்னிக் கூறியதாவது:

'டிரம்ப் அறிவித்த கோல்டுகார்டு திட்டத்தின் கீழ் ஒரே நாளில் ஆயிரம் கோல்கார்டு திட்டத்தில் விசா விற்பனை செய்யப்பட்டுள்ளது. மேலும் கோல் கார்டு வாங்குவதற்காக வரிசை கட்டி நிற்கின்றனர். இதன் மூலம் கிரீன் கார்டு வைத்திருப்பது போன்று கோல்டு கார்டும் பயனுள்ளதாக இருக்கும். அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை பெற்றதற்கு சமம். இத்திட்டம் மிகப்பரெிய வெற்றி பெற்றுள்ளது.' என்று தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

America Gold Card Program 1000 people received visas in a single day


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->