கலைஞர் திமுக, ஸ்டாலின் திமுக! முக்கிய விவகாரத்தில் கைவைத்த அன்புமணி இராமதாஸ்!
Dr Anbumani Ramadoss Say About Stalin DMK and Kalaingar DMK
இன்று செய்தியாளர்களை சந்தித்த பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் தெரிவிக்கையில், "விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டி என்பது பணத்தை மட்டும் நம்பி இருக்கின்ற ஆளுங்கட்சி திமுகவிற்கும், மக்கள் பலம், பாட்டாளிகள் பலம், விவசாயிகள் பலத்தை வைத்திருக்கின்ற தேசிய ஜனநாயக கூட்டணியான எங்கள் பாமக வேட்பாளர் சி.அன்புமணி அவர்களுக்கும் இடையேயான போட்டி.
இந்த தேர்தலுக்காக 10 அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளார். இவர்கள் தொகுதிக்கு வருவார்கள். தேர்தல் நேரத்தில் இப்போது 10 அமைச்சர்கள் வருகிறீர்கள்? இவ்வளவு காலம் இங்கே சென்றீர்கள்? தொகுதி மக்களை பார்த்தீர்களா? தொகுதி மக்களுக்கு ஏதேனும் செய்தீர்களா? விவசாயிகளுக்கு ஏதேனும் செய்திர்களா? அல்லது இந்த விழுப்புரம் மாவட்டத்திற்கு தான் ஏதாவது செய்தீர்களா?
தற்போது இருக்கிற ஆளுங்கட்சி தான் இவர்கள் இந்த ஜாதி, இந்த மதம், இந்த இனம், எப்படி பிரச்சனையை மூட்டலாம் என்று திட்டமிட்டு கொண்டிருக்கிறார்கள். எங்களை பொறுத்தவரை அனைவருமே பாட்டாளிகள். பாட்டாளிகள் என்றால் யார்? நெத்தியில் வியர்வை வருகின்றவர்கள் அனைவருமே பாட்டாளிகள் தான். அவர்கள் எந்த ஜாதியை சேர்ந்தவர்களாக, எந்த மதத்தை சார்ந்தவர்களாக இருந்தாலும் சரி, அனைவருமே பாட்டாளிகள் தான்.
திமுகவிற்கு சமூக நீதி பற்றி பேச எள்ளளவும் தகுதி கிடையாது. மேடைக்கு மேடை சமூக நீதி என்று வாய்கிழிய பேசிக் கொண்டிருக்கிறார்கள். நீங்கள் என்ன சமூக நீதிக்காக செய்து உள்ளீர்கள்?
கலைஞர் திமுக வேறு, ஸ்டாலின் திமுக வேறு. ஸ்டாலின் திமுக இப்போது இருக்கின்ற திமுகவிற்கு சமூகநீதிக்கும் அவர்களுக்கும் சம்பந்தமே இல்லை. ஏனென்றால் திரு ஸ்டாலினை சுற்றி இருக்கின்ற நாலஞ்சு அமைச்சர்களுக்கும், சமூக நீதிக்கும் சம்பந்தம் கிடையாது. அந்த அமைச்சர்களின் பேச்சைக் கேட்டு தான் ஸ்டாலின் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார் என்று நான் சொல்கிறேன்.
உங்க அமைச்சர்களை எல்லாம் நான் அமைச்சர்களாக பார்க்கவில்லை. அவர்களை வியாபாரிகளாக, வணிகர்களாக தான் பார்க்கிறேன். அதில் ஒரு மூன்று வணிகர்கள் இந்த தொகுதியில் பொறுப்பெடுத்து இருக்கிறார்கள். இவர்களுக்கும் சமூக நீதிக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கா? இல்லை. எப்படியாவது இந்த தொகுதி வாக்காளர்களை விலை கொடுத்து வாங்கலாம் என்று இருக்கிறார்கள்" என்று அன்புமணி இராமதாஸ் தெரிவித்தார்.
English Summary
Dr Anbumani Ramadoss Say About Stalin DMK and Kalaingar DMK