அமித்-ஷா தமிழகம் வருகை; ராணிப்பேட்டை மாவட்டத்தில் டிரோன்கள் பறக்க தடை..! - Seithipunal
Seithipunal


மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாளை தமிழகத்திற்கு வருகை தரவுள்ளார். இதனையொட்டி 02 நாட்களுக்கு ராணிப்பேட்டை மாவட்டத்தில் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- 

வருகின்ற 06.03.2025 மற்றும் 07.03.2025 ஆகிய தேதிகளில் மத்திய உள்துறை அமைச்சர் அவர்கள் ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே தக்கோலத்தில் உள்ள மத்திய தொழிற்பாதுகாப்பு படை (CISF) பயிற்சி மையத்திற்கு வருகை தர இருப்பதால், ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விவேகானந்த சுக்லா இ.கா.ப., அவர்கள் 06.03.2025 மற்றும் 07.03.2025 ஆகிய தேதிகளில் ராணிப்பேட்டை மாவட்டம் முழுவதையும் டிரோன்கள் (Drones) மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் (Other Unmanned Aerial Vehicles) றக்க தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவித்துள்ளார். என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் பாதுகாப்பு காரணமாக டிரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்கவிடும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை என்பதும் இதன்மூலம் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. என்று அந்தச் செய்திக்குறிப்பில் மேலும்,தெரிவிக்கப்பட்டுள்ளது


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Drones banned in Ranipet district due to Amit Shah's visit to Tamil Nadu


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->