சென்னை மக்களே உஷார்..!! புழல், பூண்டி ஏரிகளுக்கான நீர் வரத்து அதிகரிப்பு..!! - Seithipunal
Seithipunal


மாண்டஸ் புயல் இன்று அதிகாலை 3:15 மணி அளவில் மகாபலிபுரம் அருகே கரையை கடந்தது. இதன் காரணமாக தமிழகத்தில் பல பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னையின் புறநகர் பகுதிகளான மாதவரம், ஆவடி, திருவள்ளூர், ஸ்ரீபெரும்புதூர், செங்குன்றம், புழல் ஆகிய பகுதிகளில் அதிக கன மழை பெய்து வருகிறது.

இதனால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் பெரும்பாலான ஏரிகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. குறிப்பாக திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்துள்ள பெரும்பாலான ஏரிகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. இது குறித்து திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் "புழல் ஏரியின் மொத்த கொள்ளலுவான 3,300 மில்லியன் கன அடியில் 2,508 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது. புழல் ஏரிக்கான நீர்வரத்து 2,795 கனஅடியாக உள்ள நிலையில் 287 கன அடி நீர் மட்டுமே தற்பொழுது வெளியேற்றப்படுகிறது. 

அதேபோன்று சென்னையின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் பூண்டி ஏரியின் மொத்த கொள்ளளவான 3,231 மில்லியன் கனாடியில் தற்பொழுது 2,681 மில்லியன் கன அடி நீர் இருப்பில் உள்ளது. பூண்டி ஏரிக்கு வினாடிக்கு 2,005 கன அடி நீர் வரும் நிலையில் 153 கன அடி நீர் மட்டுமே வெளியேற்றப்படுகிறது. 

சென்னையின் மற்றொரு நீர் ஆதாரமான சோழவரம் ஏரியின் மொத்த கொள்ளளவான 181 மில்லியன் கன அடியில் தற்பொழுது 5 54 மில்லியன் கன அடி நீர் மட்டுமே இருப்பில் உள்ளது. சோழமரம் ஏரிக்கு வினாடிக்கு 287 கன அடி நீர் வரும் நிலையில் வெறும் 9 கன அடி நீர் மட்டுமே திறக்கப்பட்டுள்ளது.

கண்ணன் கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரியின் மொத்த கொள்ளளவு ஆன 500 மில்லிய கண்ணாடி நீர் இருப்பு உள்ளது. இதன் காரணமாக ஏரிக்கு வரும் 35 கன அடி நீர் மொத்தமாக வெளியேற்றப்படுகிறது" என அறிவித்துள்ளார். இதன் காரணமாக தற்பொழுது பெய்து வரும் கனமழையால் புழல், பூண்டி, சோழவரம் ஏரிகள் முழு கொள்ளளவை இன்று அல்லது நாளைக்குள் எட்டு எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக நீர் திறப்பு படிப்படியாக உயர்த்தக் கூடும் என தெரியவந்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Due to heavy rains Puzhal and poondi lakes water level increase


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->