#BREAKING:: அடேங்கப்பா.. மொத்தம் ரூ.360 கோடி.. "சிக்கிய முக்கிய ஆவணங்கள்".. தட்டி தூக்கிய அமலாக்க துறை..!!
ED confiscated property documents worth Rs360 crore from tneb official
தமிழகம் முழுவதும் உள்ள மின்வாரிய அதிகாரிகள் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத் துறையினர் கடந்த 24 ஆம் தேதி முதல் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர். மின்வாரியத்தில் பணிபுரியும் உயர் அதிகாரிகள் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபடுவதாக தொடர்ந்து புகார் எழுந்தது. அதன் அடிப்படையில் அமலாக்க துறையினர் கடந்த 4 நாட்களாக சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக சென்னையில் உள்ள தமிழ்நாடு மின்வாரிய அதிகாரிகள் தொடர்புடைய 10 இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் பல்வேறு முக்கிய ஆவணங்கள், எலக்ட்ரானிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்த சோதனையில் பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களை ஆய்வு செய்த அமலாக்கத் துறையினருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. மின்வாரிய உயர் அதிகாரிகள் தொடர்புடைய இடங்களில் பறிமுதல் செய்யப்பட்ட சொத்து ஆவணங்களின் மதிப்பு சுமார் 360 கோடி ரூபாய் என்பதை அமலாக்கத்துறை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.
இந்த ஆவணங்கள் அனைத்தும் ரூ.360 கோடியை தென்னிந்திய கார்ப்பரேஷன் மூலம் தமிழ்நாடு மின்வாரியத்தில் வைப்பு நிதியாக முதலீடு செய்யப்பட்டுள்ளதை கமலக்கத்துறை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். மேலும் இந்த சோதனையில் ஆவணங்களுடன் ரொக்க பணமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இந்த ஆவணங்களின் அடிப்படையில் அமலாக்க துறையினர் சட்ட ரீதியாக நடவடிக்கை மேற்கொள்ள தயாராகி வருகின்றனர். மின்வாரியத்தில் பணிபுரியும் அரசு அதிகாரிகளே முறைகேடாக மின்வாரியத்தில் வைப்பு நிதியாக முதலீடு செய்துள்ளது அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.
English Summary
ED confiscated property documents worth Rs360 crore from tneb official