தமிழக வரலாற்றில் முதல் முறையாக தலைமை செயலகத்தில் ரெய்டுவிட்ட அமலாக்கத்துறை! செந்தில்பாலாஜி விவகாரத்தில் அதிரடி! - Seithipunal
Seithipunal


சென்னையில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் அரசு இல்லம், ஆர்.ஏ.புரம், அபிராமபுரத்தில் உள்ள இல்லங்களிலும், கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் பூர்விக வீடு உள்ளிட்ட 5 இடங்களிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில்,  சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் அலுவலகத்தில் அமலாக்கத்துறை திடீரென சோதனை மேற்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மத்திய துணை ராணுவ வீரர்கள் துணையுடன் அமலாக்கத்துறை அதிகாரிகள் இந்த சோதனையை மேற்கொண்டுள்ளனர். 

மேலும் இந்தியன் வங்கியை சேர்ந்த சில  அதிகாரிகளையும் அமலாக்கத்துறை அதிகாரிகள் உடன் அழைத்துச் சென்றதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழக வரலாற்றில் , தலைமைச் செயலகத்தில் உள்ள ஒரு அமைச்சரின் அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை செய்திருப்பது இதுவே முதல் முறை என்றும், இது தமிழக அரசுக்கு மிகப்பெரிய ஒரு பின்னடைவு அல்லது அவமானம் என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ED Raid In TNGovt Secretary office at senthilbalaji office


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->