பெரும் அதிர்ச்சியில் எடப்பாடி பழனிச்சாமி! சினிமா பாணியில் நடந்த படுகொலை!
Edappadi Palanisamy Condemn to Cuddalore ADMK Bathmanadhan Hacked to Death
கடலூர் மாநகராட்சி நவநீதம் நகர் பகுதியை சேர்ந்த அதிமுக வார்டு செயலாளர் பக்தா என்ற பத்மநாதன் (43 வயது), இன்று அதிகாலை புதுச்சேரியின் எல்லைப் பகுதியான திருப்பானம்பாக்கம் என்ற பகுதியில் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
நேற்று இரவு திருப்பானம்பாக்கம் பகுதியில் நடைபெற்ற கோவில் திருவிழா கலை நிகழ்ச்சியை பார்க்க சென்ற பத்மநாதன், இன்று அதிகாலை தனது வீட்டுக்கு இருசக்கர வாகனத்தில் திரும்பிக் கொண்டிருந்தார்.
அப்போது அவரை பின்தொடர்ந்து காரில் வந்த மர்ம கும்ப கும்பல், சினிமா சண்டை காட்சியை போல, அவரின் இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியது. இதில் நிலை குலைந்து கீழே விழுந்த பத்மநாபனை, காரில் வந்த கும்பல் வெட்டி படுகொலை செய்து தப்பி ஓடி உள்ளது. இந்த கொலை சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், கடலூர் அதிமுக நிர்வாகி படுகொலைக்கு, சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்த வரின் செய்திக்குறிப்பில், "கடலூர் நவநீதம் நகர் பகுதியைச் சேர்ந்த கழக வார்டு செயலாளர் பத்மநாதன் அவர்கள் இரு சக்கர வாகனத்தில் சென்றுக்கொண்டிருந்தபோது மர்மபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார் என்ற சம்பவம் கேட்டு மிகுந்த அதிர்ச்சியுற்றேன்.
பத்மநாதன் அவர்களின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தங்களையும் தெரிவித்துக்கொள்வதுடன் அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
விடியா திமுக ஆட்சியில் யாருக்கும், எங்கும் பாதுகாப்பு இல்லை. குறிப்பாக, அரசியல் கட்சியினர் தொடர்ந்து கொலை செய்யப்படும் நிலையில் இதனைத் தடுக்க விடியா திமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுத்ததாகத் தெரியவில்லை.
மாறாக கணக்குக்கு சில கைதுகளைக் காட்டி, அதனை விளம்பரமும் செய்து, தனது வழக்கமான கண்துடைப்பு நடவடிக்கைகளால் அரசியல் கொலைகளை கடந்துவிட நினைக்கும் விடியா திமுக முதல்வருக்கு எனது கடும் கண்டனம்.
திரு. பத்மநாதன் கொலையில் தொடர்புள்ள அனைவரையும் துரிதமாக கைது செய்து, உரிய சட்ட நடவடிக்கை எடுக்க விடியா திமுக அரசை வலியுறுத்துகிறேன்" என்று எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
English Summary
Edappadi Palanisamy Condemn to Cuddalore ADMK Bathmanadhan Hacked to Death