இபிஎஸ் - இன் 70 வது பிறந்த நாள்: தமிழ்நாடு முழுவதும் தீவிர ஏற்பாடு.! - Seithipunal
Seithipunal



அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் 70வது பிறந்த நாள் வருகின்ற 12ஆம் தேதி வருகிறது. இதற்காக எடப்பாடி பழனிச்சாமையை கட்சியின் நிர்வாகிகள் சந்தித்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

இன்று காலை வரை சென்னையில் இருந்து அவரை மாவட்ட கழக செயலாளர்கள், முன்னாள் அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள் சந்தித்து முன்கூட்டியே பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். 

வாழ்த்துக்களை பெற்றுக் கொண்ட எடப்பாடி இன்று காலை 10 மணியளவில் சேலம் புறப்பட்டார். வருகின்ற 12ஆம் தேதி பிறந்தநாள் அன்று அவர் சேலத்தில் இருப்பார். வெயில் அதிகமாக இருப்பதால் தன்னை சந்திக்க யாரும் வர வேண்டாம் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார். 

மேலும் அந்தந்த பகுதிகளில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகளுக்கு கட்சி நிர்வாகிகள் ஏற்பாடு செய்து வருகின்றனர். கோவில்களில் இன்று முதல் சிறப்பு வழிபாடு செய்தல், அன்னதானம் போன்ற நிகழ்ச்சிக்கு பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

காலை சிற்றுண்டி வழங்குதல், ஏழை மாணவர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை, முதியோர் இல்லத்தில் உணவு வழங்குதல், பத்தாம் வகுப்பு, 12ஆம் வகுப்பு மாணவர்களை பாராட்டி கௌரவித்தல் போன்ற நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

தமிழ்நாடு முழுவதும் எடப்பாடி பழனிச்சாமியின் பிறந்த நாளை வருகின்ற 12ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடுவதற்கு அ.தி.மு.கவினர் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Edappadi Palaniswami birthday celebration


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->