தொடர் சரிவு முட்டை விலை - எவ்வளவுத் தெரியுமா?
egg price degrease in namakkal
தொடர் சரிவு முட்டை விலை - எவ்வளவுத் தெரியுமா?
நாமக்கல் மண்டல தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு முட்டை ஒன்றின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ.4.35 காசுகளில் இருந்து 30 காசுகள் குறைத்து ரூ. 4.05 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. இந்த விலை இன்று காலை முதல் அமலுக்கு வருகிறது.
நாமக்கல் மண்டலத்தில் கடந்த மூன்று நாட்களில் முட்டை விலை 50 காசுகள் சரிவடைந்துள்ளது. இதனால், முட்டையின் நுகர்வு மற்றும் விற்பனை குறைந்துள்ளது. நாமக்கல்லைத் தொடர்ந்து பிற மண்டலங்களிலும் முட்டை விலை குறைந்து வருகிறது.
தமிழ் நாட்டின் முட்டை உற்பத்தி கேந்திரமாக விளங்கும் நாமக்கல் மாவட்டத்தில் சுமார் 1,100 க்கு மேற்பட்ட கோழிப் பண்ணைகள் உள்ளன. இந்த பண்ணைகளின் மூலம் ஒவ்வொரு நாளும் 5 கோடி முட்டைகள் உற்பத்தியாகின்றன.
நாமக்கல்லில் உற்பத்தி செய்யப்படும் மொத்த உற்பத்தியில் 40 சதவீத முட்டைகள் கேரள மாநிலத்திற்கும், தமிழக அரசின் சத்துணவுத் திட்டத்திற்கும் அனுப்பப்படுகிறது. இதுபோக மீதமுள்ள முட்டைகள் தமிழகத்தின் பிற பகுதிகளுக்கு விற்பனைக்காக அனுப்பபட்டு வருகிறது.
English Summary
egg price degrease in namakkal