நாமக்கல்லில் முட்டை கொள்முதல் விலை கடும் உயர்வு.!
egg price raised in namakkal
நாமக்கல்லில் முட்டை கொள்முதல் விலை கடும் உயர்வு.!
நாமக்கல் மண்டலத்தில் நேற்று தேசிய முட்டை ஒருங்கிணைப்புகுழு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் 430 காசுகளாக இருந்த முட்டை விலையை 20 காசுகள் உயர்த்த முடிவு செய்தனர்.
அதன் படி முட்டை கொள்முதல் விலை 450 காசுகளாக அதிகரித்துள்ளது. கோடை வெயிலின் தாக்கத்தால் முட்டை உற்பத்தி குறைந்து உள்ளது. இருப்பினும், ரம்ஜான் நோன்பு முடிவடைந்து விட்டதால் முட்டையின் தேவை அதிகரித்துள்ளது.
இது தான் முட்டை கொள்முதல் விலை உயர்வுக்கு காரணம். முட்டைக்கோழி ஒரு கிலோ ரூ.77-க்கும், கறிக்கோழி ஒரு கிலோ ரூ.107-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அவற்றின் விலைகளில் எந்த மாற்றம் செய்யப்படவில்லை.
இது குறித்து தமிழ்நாடு முட்டைக்கோழி பண்ணையாளர்கள் சம்மேளன துணைத்தலைவர் வாங்கிலி சுப்ரமணியம் தெரிவித்ததாவது:- "தமிழகத்தில் கடும் வெயில் காரணமாக பகல் நேரத்தில் கோழிகள் சரியாக தீவனம் எடுத்துக் கொள்வதில்லை. இரவில் மட்டுமே தீவனம் எடுத்து கொள்கிறது.
அதுவும் வழக்கமாக எடுத்துக்கொள்ளும் 110 கிராமிற்கு பதில் 90 கிராம் மட்டுமே எடுத்துக் கொள்கிறது. அதனால் முட்டை உற்பத்தி 10 முதல் 15 சதவீதம் வரை குறைந்துள்ளது. இதுவே முட்டை கொள்முதல் விலை உயர்வுக்கு காரணம் என்று அவர் தெரிவித்தார்.
English Summary
egg price raised in namakkal