டெல்லி குடிநீரில் அம்மோனியா அதிகரிப்பு - அரியானா அரசிடம் விளக்கம் கேக்கும் தேர்தல் ஆணையம்.! - Seithipunal
Seithipunal


யமுனை ஆற்றின் நீரில் அமோனியாவின் அளவு அதிகரித்துள்ளதால், டெல்லியில் குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கு பா.ஜ.க. தலைமையிலான அரியானா அரசு தான் காரணம் என்று டெல்லி அரசு குற்றம்சாட்டுகிறது. 

இது குறித்து டெல்லி முதலமைச்சர் அதிஷி மற்றும் பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான் உள்ளிட்டோர் தலைமைத் தேர்தல் ஆணையருக்கு கடிதம் எழுதியுள்ளனர். டெல்லியில் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், இந்த விவகாரம் பூதமாகரமாக கிளம்பி உள்ளது. இது சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்களை நடத்துவதில் தாக்கத்தை ஏற்படுத்தும். 

கடந்த நான்கு நாட்களாக ஆற்றில் அம்மோனியா அளவு கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் வஜிராபாத், சந்திரவால் மற்றும் ஓக்லாவில் உள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் பாதிக்கப்பட்டுள்ளது என்றுத் தெரிவித்து உள்ளனர். 

இந்த கடிதத்தை பரிசீலனை செய்த தேர்தல் ஆணையம், நாளை மதியத்துக்குள் விளக்க அறிக்கை தாக்கல் செய்யும்படி அரியானா அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. டெல்லி சட்டசபைக்கு அடுத்த மாதம் 5-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

election commission ask explian of delhi water amonia increase issue


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->