சூடுபிடிக்கும் தேர்தல் பணி - மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சரிபார்ப்பு.!
election vote machine checking work for erode election
காலியாகவுள்ள ஈரோடு கிழக்கு தொகுதியின் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு அடுத்த மாதம் 5-ந்தேதி நடைபெறவுள்ளது. இதற்காக 480 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன.
இதையொட்டி, வாக்குப்பதிவு எந்திரங்கள் முதல் நிலை சரிபார்க்கும் பணி பெங்களூரு பெல் நிறுவனத்தின் மூலம் கடந்த 6-ந்தேதி முதல் ஈரோடு மாவட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திர கிடங்கில் நடைபெற்று வந்தது. அதன் பின்னர், இந்திய தேர்தல் ஆணையம் 5 சதவீதம் மாதிரி வாக்குப்பதிவு நடத்திட உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் மாதிரி வாக்குப்பதிவு நடந்தது. இந்த பணியை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் முன்னிலையில் ஈரோடு மாவட்ட தேர்தல் அதிகாரியும், ஆட்சியருமான ராஜகோபால் சுன்கரா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது, ஈரோடு ஆர்.டி.ஓ.ரவி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் முஹம்மது குதுரத்துல்லா, தேர்தல் பிரிவு தாசில்தார் சிவசங்கர் உள்பட அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் உடன் இருந்தனர்.
English Summary
election vote machine checking work for erode election