பொய் வழக்கு போடுவேன்னு மிரட்டுறாங்க.! கதறும் சோட்டா வினோத் குடும்பம்.!
Encountered chotta vinoth family inquiry
சென்னை அடுத்த தாம்பரம் அருகே மண்ணிவாக்கத்தை சேர்ந்த ரவுடிகளான சோட்டா வினோத் மற்றும் ரமேஷ் மீது கொலை உட்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருந்தன. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசாரை தாக்கியதால் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இந்த சம்பவம் குறித்து கோட்டாட்சியர் அலுவலகத்தில் விசாரணை நடைபெற்றது. அப்போது என்கவுண்டரில் உயிரிழந்த ரமேஷ் குடும்பத்தினர் 5ஆம் நாள் காரியம் கழித்து விசாரணைக்கு வருவதாக கூறி வரவில்லை.
அதே நேரத்தில் சோட்டா வினோத்தின் தாயார் மற்றும் சகோதரர்கள் ஆஜராகினர். சோட்டா வினோத் இறந்து குறித்த முதல் தகவல் அறிக்கை, பிரேத பரிசோதனை அறிக்கை எதுவும் வரவில்லை என விசாரணை அதிகாரியான கோட்டாட்சியரிடம் தெரிவித்தனர்.
மேலும் காவல்துறையினர் பொய் வழக்கு போட்டு கைது செய்துவிடுவதாக மிரட்டுவதாகவும், தங்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர். அவர்கள் அளித்த வாக்குமூலத்தை பதிவு செய்துகொண்ட கோட்டாட்சியர் தொடர்ந்து விசாரணை நடைபெறும் எனத் தெரிவித்துள்ளார்.
English Summary
Encountered chotta vinoth family inquiry