தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனை நிறைவு.!! - Seithipunal
Seithipunal


தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனை நிறைவு.!!

தமிழக மின்சார துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மீது போக்குவரத்து துறை முறைகேடு குற்றச்சாட்டு எழுந்தது. ந்தக் குற்றச்சாட்டையடுத்து அமலாக்கத்துறையினர் கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தினர். 

இதேபோல், சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் அரசு இல்லத்திலும், தலைமைச் செயலகத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் அறையிலும் அமலாக்கத்துறையினர் சோதனை நடைபெற்றது. 

மத்திய ரிசர்வ் படை பாதுகாப்புடன் 17 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்று வந்த சோதனை நிறைவடைந்தது. இதையடுத்து அமலாக்கத்துறை அதிகாரிகள் சென்னை பசுமைவழிச்சாலையில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டுக்கு வருகை தந்தனர். 

பின்னர் அமைச்சர் செந்தில் பாலாஜியை அதிகாரிகள் விசாரணைக்காக நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றனர். அப்போது அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதைத் தொடர்ந்து அவர் சென்னை ஒமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். 

இந்தத் தகவலை அறிந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் மா.சுப்பிரமணியன், அமைச்சர் எ.வ.வேலு, சேகர்பாபு உள்ளிட்டோர் மருத்துவமனைக்கு வருகை தந்தனர்.

இந்த நிலையில் தலைமைச் செயலகத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி அறையில் நடைபெற்று வந்த அமலாக்கத்துறை அதிகாரிகளின் சோதனை நிறைவடைந்துள்ளது. 

சுமார் 10 மணி நேரத்திற்கும் மேலாக நடத்தப்பட்ட சோதனையில் தலைமைச் செயலகத்தில் உள்ள அவரது அறையில் இருந்து 3 பைகளில் ஆவணங்கள் எடுத்துச் செல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Enforcement Department test finished in Chief Secretariat


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->