பாயாசத்தால் ஏற்பட்ட பஞ்சாயத்து.. கலவரமான கல்யாண வீடு.!
Engagement right for payasam in sirkazhi
பாயாசம் சுவையாக இல்லை என்று மணமகள் வீட்டினர் கூறியதால் ஏற்பட்ட வாக்குவாதத்தில் மணமகன் வீட்டினர் அவர்களை அடித்து துரத்திய சம்பவம் சீர்காழியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இன்று காலை சீர்காழி அருகே திருமண நிச்சயதார்த்த விழா ஒன்று நடந்துள்ளது. நிச்சயதார்த்தம் முடிந்த பின்னர் நிகழ்ச்சிக்கு வருகை தந்திருந்த உறவினர்களுக்கு சுவையான விருந்து கொடுக்கப்பட்டது. இதன் ஒரு பகுதியாக பந்தியில் பாயாசம் பரிமாறப்பட்டது.
அப்போது பெண் வீட்டைச் சேர்ந்த உறவினர்கள் பாயாசம் சரியில்லை என்று கூறியுள்ளனர். இதனால் மணமகன் வீட்டினர் ஆத்திரம் அடைந்துள்ளனர். ஆகவே பெண் வீட்டைச் சேர்ந்தவர்களை தகாத முறையில் பேசியுள்ளனர்.
இதனால் வாக்குவாதம் முற்றி கைகலப்பு ஏற்பட்டது. அதில் இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.
English Summary
Engagement right for payasam in sirkazhi