காங்கிரஸ் நிர்வாகி உயிரிழப்பு: சட்ட ஒழுங்கு சீர்கேட்டின் உச்சம்... இபிஎஸ் விமர்சனம்.!
EPS condolences Jayakumar death
திருநெல்வேலி, கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் இரண்டு நாட்களாக மாயமான நிலையில் இன்று அவரது வீட்டின் அருகே உள்ள தோட்டத்தில் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
இது குறித்து போலீசார் கொலையா தற்கொலையா என பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஜெயக்குமாரின் மரணத்திற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் விமர்சனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இதுகுறித்து அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், திருநெல்வேலி மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் இரண்டு நாட்களாக காணவில்லை என அவரது மகன் புகார் அளித்திருந்த நிலையில் இன்று அவர் சடலமாக மீட்கப்பட்டார் என்ற செய்தியை கேட்டு அதிச்சியடைந்தேன்.
அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த விடியா தி.மு.க ஆட்சியில் சட்ட ஒழுங்கு சீர்குலைந்து வருவதை தினம் தோறும் நான் சுட்டிக்காட்டி வருகிறேன்.
தற்போது ஒரு தேசிய கட்சியின் மாவட்ட தலைவர் பொறுப்பில் உள்ளவர் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டது சட்ட ஒழுங்கு சீர்கேட்டின் உச்சமாக தெரிகிறது.
ஜெயக்குமார் மரணத்தில் தொடர்பு உள்ளவர்களை உடனடியாக கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இது போன்ற சம்பவங்கள் இனிமேல் நடக்காமல் சட்ட ஒழுங்கை காக்க செயல்படுமாறு விடியா அரசின் பொம்மை முதல்வரை வலியுறுத்துகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.
English Summary
EPS condolences Jayakumar death