ஒரு ஆன்மீகத் தலைவரை உலகம் இழந்துவிட்டது - இபிஎஸ் இரங்கல்.!
eps condoles pope francis death
கத்தோலிக்க திருச்சபையின் தலைவராக இருந்து வந்த போப் பிரான்சிஸ்க்கு கடந்த பிப்ரவரி 14-ம் தேதி திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் ரோம் நகரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்.
தொடர்ந்து 5 வாரங்களுக்கு மேலாக சிகிச்சையில் இருந்த போப் பிரான்சிஸ் உடல்நலம் தேறிய நிலையில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இருப்பினும் மருத்துவர்களின் கண்காணிப்பில் இருந்து வந்த நிலையில், இன்று காலமானார். போப் பிரான்சிஸ் மறைவுக்கு உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:- "புனித திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் மறைவை அறிந்து மிகவும் வருத்தமடைந்தேன். அவரது வாழ்க்கை இரக்கம், பணிவு மற்றும் அசைக்க முடியாத நம்பிக்கையின் கலங்கரை விளக்கமாக இருந்தது.
அமைதி, அன்பு மற்றும் ஒற்றுமை என்ற செய்தியால் லட்சக்கணக்கான மக்களை ஊக்கப்படுத்திய ஆன்மீகத் தலைவரை உலகம் இழந்துவிட்டது. உலகம் முழுவதும் உள்ள அவரது அனைத்து ஆதரவாளர்களுக்கும் எனது மனமார்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா நித்திய சாந்தியடையட்டும்" என்று தெரிவித்தார்.
English Summary
eps condoles pope francis death