நெல்லையில் சமத்துவ இஃப்தார் நோன்பு துறப்பு நிகழ்ச்சி..அனைத்து மதத்தினரும் பங்கேற்பு!
Equality Iftar Breaking Ceremony in Tirunelveli Participation of all religions
திருநெல்வேலி டவுண் பாட்டப்பத்து ஜும்ஆ பள்ளிவாசல் ஜமாஅத் சார்பில் அனைத்து சமுதாய மக்களும் பங்கேற்ற சமய நல்லிணக்க நோன்பு துறப்பு இஃப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது.
பாடகர் நெல்லை அபுபக்கர் அவர்கள் தலைமை ஏற்று இந்நிகழ்ச்சியை நெறிப்படுத்தினார்.திருநெல்வேலி மாவட்ட ஜமாத் பிரமுகர்கள், இஸ்லாமிய இயக்கங்களில் முன்னோடிகள் இந்நிகழ்ச்சியில் முன்னிலை வகித்தனர்.
நெல்லை மாவட்ட அரசு காஜி அல்ஹாஜ் முஹம்மது கஸ்ஸாலி ஹசரத் அவர்கள் திருமறைக் குர்ஆனின் வசனங்களை ஓதி துவக்கி வைத்தார்.திருநெல்வேலி நாடாளுமன்ற மாண்புமிகு உறுப்பினர் அண்ணாச்சி ராபர்ட் புரூஸ் MP அவர்கள்,திருநெல்வேலி மாநகராட்சியின் மதிப்பிற்குரிய மேயர் ராமகிருஷ்ணன் (எ) கிட்டு அவர்கள்,
மேனாள் அமைச்சர் TPM மைதீன்கான் அவர்கள்,திமுக மாநகர கழக செயலாளர் திரு.சு.சுப்பிரமணியன் அவர்கள்,உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகளின் தலைவர்கள், பொருப்பாளர்கள் சிறப்பு அழைப்பார்களாக கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக விசிக சார்பில் நானும் கலந்து கொண்டு, நமது இந்திய நாட்டின் நிலவும் சமகால அரசியல் சூழ்நிலைக்கு மத்தியில் சமத்துவ இஃப்தார் நிகழ்ச்சியின் முக்கியத்துவம் குறித்து உரையாற்றினேன்.
என்னோடு நெல்லை மாநகர மாவட்ட விசிக செயலாளர் தோழர் முத்து வழவன் உள்ளிட்ட விசிக பொறுப்பாளர்களும், முஸ்லிம் லீக், தமுமுக - மமக, SDPI, மஜக உள்ளிட்ட கட்சிகளின் பொறுப்பாளர்களும் இந்நிகழ்ச்சியில் கலந்து சிறப்பித்தனர்.
English Summary
Equality Iftar Breaking Ceremony in Tirunelveli Participation of all religions