நான்கு கம்பெனி போலீஸ் பாதுகாப்பை மீறி போடப்பட்ட குண்டு! கோவையில் நீடிக்கும் பதற்றம்! - Seithipunal
Seithipunal


கோவை போலீஸ் அணிவகுப்பு நடத்தியும் அடங்காத சமுக விரோதிகள்!

இந்து மதம் பற்றி தவறாக பேசியதாக திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசாவை கண்டித்து தமிழக முழுவதும் பாஜகவினர் மற்றும் இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டங்களில் நடத்தினார்கள். கோவை இந்து முன்னணியினர் சார்பில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் பேசிய கோவை மாவட்ட பாஜக தலைவர் பாலாஜி ராமசாமி ஆ.ராசாவை பற்றி இழிவான வார்த்தைகளால் பேசி இருந்தார். இதனால் அவர் கைது செய்யப்பட்டு 15 நாள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்.

கோவை முழுவதும் நேற்று மாலை வரை பாஜக மற்றும் இந்து முன்னணியினர் நிர்வாகிகள் சம்பந்தப்பட்ட நான்கு இடங்களில் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டது. இதனால் பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்கள் மற்றும் மத வழிபாட்டு தலங்களில் நான்கு கம்பெனி போலீசார் பாதுகாப்பு பணியில் அமர்த்தபட்டனர். போலீஸ் ரோந்து பணியும் அதிகரிக்கப்பட்டு, நேற்று மாலை 5 மணி அளவில் கோவை மாநகரில் போலீஸ் அணிவகுப்பு நடத்தப்பட்டது. 

இந்த நிலையில் கோவை மாவட்டம் புதூர் பகுதியில் வசித்து வரும் ஆனந்த கல்யாண கிருஷ்ணன் என்பவர் ஆர்எஸ்எஸ் கிளை அமைப்பான சமஸ்கிருத பாரத் அமைப்பின் தமிழக கேரள கேந்திரிய பொறுப்பாளராக இருந்து வருகிறார். இவர் வீட்டில் நேற்று இரவு மர்ம கும்பல் பெட்ரோல் குண்டு வீசி சென்றுள்ளது. இந்த குண்டு வீச்சில் உயிர் சேதமா பொருள் சேதமோ ஏற்படவில்லை. இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் அப்பகுதியில் விசாரணை மேற்கொண்டுள்ளனர். 

நேற்று மாலை கோவை மாநகரில் காவல்துறை மற்றும் அதிக விரைவு படையினர் நடத்திய அணி வகுப்பு மக்கள் மத்தியில் பதற்றத்தை தணிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நேற்று இரவு மீண்டும் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் அரங்கேறி உள்ளது. இதனால் அப்பகுதியில் பதட்டமான சூழல் உண்டாக்கியுள்ளது. 

நேற்று மட்டும் ஐந்து இடங்களில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. மக்கள் காவல்துறை மீது நம்பிக்கை வைத்து வெளியே வர அச்சப்படுவார்கள். பெட்ரோல் குண்டு வீச்சில் ஈடுபடும் சமூக விரோதிகளை கைது செய்தால் மட்டுமே கோவையில் உள்ள பதற்றம் தணியும் என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். 

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Even though the Coimbatore police held a parade and the anti social elements did not stop


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->