அமைச்சரை மாப்பிள்ளை என்ற முன்னாள் எம்.எல்.ஏ - சட்டசபையில் பரபரப்பு..!
ex mla kc karuppannan called mappillai to minister senthil balaji
சமீபத்தில் தமிழக சட்டசபையில் பொது மற்றும் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து இந்த பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றது. சட்டசபை உறுப்பினர்கள் கேட்கப்படும் கேள்விகளுக்கு அத்துறைச் சார்ந்த அமைச்சர்கள் பதிலளித்து வருகின்றனர்.
இந்த நிலையில், சட்டசபையில் இன்றைய கேள்வி நேரத்தின் போது மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து கொண்டிருந்தார்.

அப்போது அதிமுக எம்.எல்.ஏ. கே.சி.கருப்பண்ணன் பேசுகையில், தனியார் நிறுவனங்கள் சோலார் மின்தகடுகளை அதிகமாக தயாரிக்கின்றன. அவை 100 கேவி திறன் கொண்டதாக உள்ளன. அவற்றை 120 கே.வி திறன் உள்ளதாக அனுமதிக்க வேண்டும்.
இதனால் மின்வாரியத்திற்கு எந்த நட்டமும் ஏற்படாது. இதற்கு மாப்பிள்ளை அதாவது அமைச்சர் செந்தில் பாலாஜி அனுமதிக்க வேண்டும் என்று பேசினார். அதிமுக எம்.எல்.ஏ.வின் இந்த பேச்சால் அவையில் சிரிப்பலை ஏற்பட்டது. இதையடுத்து கருப்பண்ணன் பழக்க தோஷத்தில் வந்துவிட்டது சாரி… சாரி... என்று கூறி சமாளித்தார்.
English Summary
ex mla kc karuppannan called mappillai to minister senthil balaji