தென்கொரியாவில் கொழுந்துவிட்டு எரியும் காட்டுத்தீ; 28 பேர் உயிரிழப்பு; பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அச்சம்..!
28 dead in South Koreas raging wildfire
தென்கொரியாவின் தெற்கத்திய பகுதிகளில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீ காரணமாக இதுவரை 28 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் பாலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. வறண்ட வானிலை மற்றும் அதிவேகக் காற்று வீசுவதால் தீயை கட்டுப்படுத்தும் முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இருந்தாலும் அங்கு தீ கொழுந்துவிட்டு எரிகிறது.
குறித்த காட்டுத்தீ காரணமாக சுமார் 43,000 ஏக்கர் பரபரப்பளவு கொண்ட நிலம் பாதிக்கப்பட்டுள்ளது. அத்துடன், நூற்றுக்கணக்கான கட்டமைப்புகள் சேதமடைந்துள்ளன. குறிப்பாக 1,300 ஆண்டுகள் பழமை வாய்ந்த புத்தர் கோவில் எரிந்து நாசமாகியமை குறிப்பிடத்தக்கது.
காட்டுத்தீ பெரும்பாலும் அணைக்கப்பட்டு விட்டதாக தீயணைப்புத் துறையினர் தெரிவித்திருந்த நிலையில், வறண்ட வானிலை மற்றும் அதீத காற்றோட்டத்தால் மீண்டும் காட்டுத்தீ பரவியுள்ளது. தற்போது, காட்டுத்தீயை கட்டுப்படுத்தும் பணிகளில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். இதில், 130 ஹெலிகாப்டர்கள், நூற்றுக்கணக்கான வாகனங்கள் தீயை அணைக்க பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
English Summary
28 dead in South Koreas raging wildfire