என்னை மட்டும் ஒட்டுனீங்க... அமைச்சர் மூர்த்தியையும் ஓட்டுங்க - செல்லூர் ராஜு.!!
ex mla sellur raju speech about minister moorthy
என்னை 'ஓட்டுனதை' போல அமைச்சர் மூர்த்தியையும் நீங்கள் 'ஓட்டுங்க' என்று முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜூ கூறியுள்ளார். இதுகுறித்து நேற்று மதுரையில் அவர் தெரிவித்ததாவது:-
"போட்ட ரோட்டுக்கு மறுபடியும் பூமிபூஜை போடுறார் அமைச்சர் மூர்த்தி. அவர்கிட்ட இந்த ரோடுக்கு ஏற்கனவே பூமிபூஜை போட்டாச்சுனு அதிகாரிகள் சொல்லியிருந்தா போயிருப்பாரா; போயிருக்கமாட்டார்.

அவர்கிட்ட அதிகாரிகள் சொல்லல. கூட்டிட்டு போய் அமைச்சரை மாட்டி விட்டுட்டாங்க.
இப்ப மேற்கு தொகுதி எம்.எல்.ஏ.,வான என் கிட்டயும் மக்கள்கிட்டயும் அமைச்சர் மூர்த்தி மாட்டிகிட்டாரு. இதுமாதிரி அதிகாரிகள் சொல்லித் தான், நான் போய் தெர்மோகோல் போட்டது.
அதிகாரி சொல்லித்தானே அமைச்சர்கள் போறாங்க. தெர்மோகோல் விஷயத்துல என்னை மட்டும் 'ஓட்டுனீங்க', இப்ப முடிஞ்சா அமைச்சர் மூர்த்தியையும் 'ஓட்டுங்க' பார்ப்போம்" என்று அவர் தெரிவித்தார்.
English Summary
ex mla sellur raju speech about minister moorthy