நடிகை கஸ்தூரி அதிமுகவின் இணைந்தாரா? உண்மை என்ன? அதிகாரபூர்வ செய்தி வெளியானது! - Seithipunal
Seithipunal


நடிகர் நடிகை கஸ்தூரி அதிமுகவில் இணைந்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.

வைரலாகி வரும் அந்த புகைப்படத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு நடிகை கஸ்தூரி பூங்கொத்து வழங்குவது போல் அமைந்துள்ளது.

மேலும் இந்த புகைப்படத்தை பதிவிட்டுள்ள அந்த நபர், "நடிகை கஸ்தூரி, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை நேரில் சந்தித்து, தன்னை அதிமுகவில் இணைத்து கொண்டார்' என்று பதிவிட்டுள்ளார்.

இந்த பதிவை நம்பிய அதிமுகவினர் தொடர்ந்து பகிர்ந்து வருகின்றனர். மேலும் நடிகை கஸ்தூரி அதிமுகவில் இணைந்து விட்டதாகவே அதிமுகவினரும் பதிவிட்டு வருகின்றனர். 

இந்த நிலையில், இது குறித்து விளக்கம் அளித்துள்ள நடிகை கஸ்தூரி, "அந்த புகைப்படம் தமிழக முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமி அவர்கள் இருந்தபோது, அரசியலுக்கு அப்பாற்பட்டு அவரை நேரில் சந்தித்து பூங்கொத்து வழங்கி வந்தேன்.

அந்த புகைப்படத்தை இப்போது பகிர்ந்து, நான் அதிமுகவில் இணைந்து விட்டதாக சிலர் வதந்தி பரப்பி வருகின்றனர். இந்த வதந்திகளை பற்றி நான் கவலைப்படுவதில்லை.

இருந்தாலும் உண்மை என்ன என்று மக்களுக்கு தெரிவிக்க வேண்டும். நான் அதிமுகவில் இணையவில்லை. அந்த புகைப்படம் நான்கு வருடங்களுக்கு முன்பு எடுத்தது.

இதில், ஒரு வேடிக்கையான வருத்தம் என்னவென்றால், நான்கு வருடத்திற்கு முன்பு எடுக்கப்பட்ட புகைப்படத்தை, இப்போது இருக்கும் கஸ்தூரிக்கும் வித்தியாசம் கூட தெரியாமல், அதை உண்மை என்று நம்பியவர்களை நினைத்து தான் வருத்தமாக உள்ளது" என்று நடிகை கஸ்தூரி விளக்கம் அளித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Fact Check Actor Kasturi joint ADMK


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->