பெண் பார்த்துவிட்டு திரும்பிய போது ஏற்பட்ட சோகம்.. ஒரே குடும்பத்தை சேர்ந்த 2 பெண்கள் பலி.! - Seithipunal
Seithipunal


கோயம்புத்தூர் மாவட்டம் தொண்டாமுத்தூரை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 49). இவருடைய மனைவி ராஜம்மாள் (வயது 47). இவர்களது மகன் கிட்சன் ஞானதுரை (வயது 27). இந்த நிலையில் நேற்று, ஞானதுரைக்கு பெண் பார்ப்பதற்காக செல்வராஜ், ராஜம்மாள், ஞானதுரை, உறவினர்களான செல்வி, ஆசீர் கோவில்பிள்ளை, அகஸ்டின் ஆகிய 6 பேர் திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த வடுகபாளையம் சென்றனர்.

பெண் பார்த்து விட்டு கோவைக்கு திரும்பிய போது, பல்லடம் தாசில்தார் அலுவலகம் எதிரே தாங்கள் வந்த வேனை சாலையோரம் நிறுத்தி விட்டு பேசிக் கொண்டிருந்தனர்.

அப்போது, பல்லடத்தில் இருந்து செஞ்சேரிபுத்தூர் நோக்கி சென்ற சரக்கு லாரி ஒன்று‌ ஓட்டுநரின் கட்டுபாட்டை இழந்து சாலையோரம் நின்றுகொண்டிருந்தவர்கள் மற்றும் வேன் மீது மோதியது. இந்த விபத்தில் செல்வி சம்பவ இடத்திலேயே உடல்நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

படுகாயமடைந்த ராஜம்மாள், செல்வராஜ், அகஸ்டின் உட்பட 5 பேரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில், செல்லும் வழியிலேயே ராஜம்மாள் உயிரிழந்தார். படுகாயமடைந்த 4 பேருக்கும் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், சரக்கு லாரி ஓட்டி வந்த உடுமலையை சேர்ந்த பட்டீஸ்வரன் என்பவர் பல்லடம் தாசில்தார் நந்தகோபாலிடம் சரணடைந்தார். இந்த விபத்து குறித்து பல்லடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Family Marriage alliance returned to home accident


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->