சிவகங்கை : சவுதியில் உயிரிழந்த கணவர் உடலை மீட்டு தரக்கோரி ஆட்சியரிடம் கதறும் குடும்பத்தினர்.! - Seithipunal
Seithipunal


சிவகங்கை : சவுதியில் உயிரிழந்த கணவர் உடலை மீட்டு தரக்கோரி ஆட்சியரிடம் கதறும் குடும்பத்தினர்.!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருமாஞ்சோலை கிராம பகுதியைச் சேர்ந்தவர்கள் செல்வம்-தெய்வானை தம்பதியினர். இவர்களுக்கு இரண்டு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தைகள் உள்ளனர். இதில், செல்வம் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக சவுதி அரேபியாவில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் ஓட்டுநராக வேலை பார்த்து வந்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த 12-ம் தேதி செல்வம் இறந்து விட்டதாக சவுதி அரேபியாவில் உள்ள அவரது நண்பர்கள் தெய்வானை குடும்பத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் செல்வத்தின் உடலைச் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க கோரிக்கை மனு அளித்துள்ளனர். 

இந்த மனு அளித்து இருபது நாட்களாகியும் செல்வத்தின் உடலைக் கொண்டு வர எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட்டதாக தெரியவில்லை. இதையடுத்து தெய்வானை இன்று சிவகங்கை மாவட்ட ஆட்சியரிடம், குடும்ப வாழ்வாதாரத்திற்காக வெளிநாட்டு வேலைக்குச் சென்று மர்மமான முறையில் உயிரிழந்த கணவரின் உடலைக் கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும். 

வருவாய்க்கு வழியில்லாத நிலையில் உள்ள எங்கள் குடும்பத்திற்கு, தனது கணவர் வேலை பார்த்த கம்பெனியில் தர வேண்டிய சம்பள நிலுவைத் தொகையினையும், இழப்பீட்டையும் பெற்றுத்தரக்கோரி மனு அளித்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

family members request sivakangai collector for recover husband body in saudi arebia


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->