#Breaking : அரசு பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்புக! -பள்ளிக்கல்வித்துறை.!
Fill Vacant Teacher Vacancies in Government Schools
அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை 13,000 ஆசிரியர்களை தற்காலிக அடிப்படையில் நியமனம் செய்ய கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் அரசு பள்ளிகளில் அதிகரித்துள்ள மாணவர்கள் சேர்க்கைக்கு ஏற்ப ஆசிரியர்கள் நியமனங்களும் அதிகரிக்கப்படும் என்று கல்வி அமைச்சர் மகேஷ் ஏற்கனவே தெரிவித்தார்.
ஆசிரியர்கள் தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப புதிய விஷயங்களை கற்றுக்கொண்டு தனித்திறனை வளர்த்துக்கொள்ள வேண்டும். அரசு பள்ளிகளில் 66 லட்சத்தில் இருந்து 71 லட்சமாக மாணவர்கள் சேர்க்கை அதிகரித்துள்ளது. மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப புதிய ஆசிரியர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் அரசுப் பள்ளிகளில் 13 ஆயிரம் ஆசிரியர்களை தற்காலிக அடிப்படையில் பணி நியமனம் செய்ய கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, ஜூலை 1ஆம் தேதி முதல் தற்காலிக ஆசிரியர்களை நியமனம் செய்ய மாவட்ட அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் தற்காலிக ஆசிரியர்களுக்கு ரூ.7500 முதல் ரூ.12 ஆயிரம் வரை சம்பளம் வழங்கவும் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
English Summary
Fill Vacant Teacher Vacancies in Government Schools