சாலையில் சென்று கொண்டிருந்த போது தீப்பிடித்த எரிந்த இருசக்கர வாகனம்..!
Fire accident In Bike
திருவள்ளூர் மாவட்டம், கரிக்கலவாக்கம் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் சந்தோஷ். இவர் அவரது மனைவியுடன் திருவள்ளூர் நோக்கி அவரது இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். திடீரென இருசக்கர வாகனத்தின் எஞ்சினில் இருந்து புகை வந்துள்ளது.
உடனடியாக இருசக்கர வாகனத்தை நிறுத்தினர. உடனடியாக அந்த இருசக்கர வாகனம் தீப்பற்றி எரிந்தது. சாலையில் நடுவில் இருசக்கர வாகனம் தீப்பற்றி எரிவதைக் கண்ட அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் தீயணைப்புதுறையினருக்கு தகவல் அளித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை கட்டுப்படுத்தினார்கள். ஆனால், அதற்குள்ளாக இருசக்கர வாகனம்முழுவதும் எரிந்து நாசமானது. இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.