பரபரப்பு - விழுப்புரத்தில் தனியார் வங்கியில் தீ விபத்து..!
fire accident in vilupuram bank
விழுப்புரத்தில் தனியார் வங்கி ஒன்றில் தீ பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் கலைஞர் அறிவாலயம் அருகே தனியார் வங்கி ஒன்று செயல்பட்டு வந்தது. இந்த வங்கியில் பத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணி புரிந்து வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று இந்த வங்கியின் மெயின் பிரேக்கர் சுவிட்ச் பகுதியில் திடீரென புகை வரத் தொடங்கியது. பின்னர் திடீரென தீப்பிடித்து எரியத் தொடங்கியது. இதைபார்த்த அப்பகுதியை சேர்ந்தவர்கள் சம்பவம் குறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவலளித்தனர்.
அதன் படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் போராட்டத்திற்கு பிறகு தீயை அணைத்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
fire accident in vilupuram bank