நள்ளிரவில் பற்றிய தீ.!!! கருகிய முக்கிய ஆவணங்கள்.....
Fire broke middle of the night Important documents were burnt
திருவண்ணாமலை: மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள பி.எஸ்.என்.எல் அலுவலகத்தில் நேற்று இரவு தீ விபத்து ஏற்பட்டு, முக்கிய ஆவணங்கள் தீயில் கருகி நாசமாயின.
திருவண்ணாமலை மாவட்டத்தின் மத்திய பேருந்து நிலையம் அருகே பிஎஸ்என்எல் அலுவலகம் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் நேற்று இரவு திடீரென அலுவலகத்தில் தீ பற்றியுள்ளது. இதனை அறிந்த தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இதில் கணினிகள், அச்சு இயந்திரங்கள், பல்வேறு சாதனங்கள் மற்றும் முக்கிய ஆவணங்கள் என அனைத்தும் தீயில் கருகி நாசமாயின.
தீயணைப்புத் துறையினர்ச் சோதனை மேற்கொண்டதில் அலுவலகத்தில் உள்ள கணினிகள், மின்சாதனங்களின் மூலம் மின்கசிவு ஏற்பட்டுத் தீயாய் பரவியுள்ளது எனத் தகவல் வெளியானது. தீப்பற்றிய சம்பவமானது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Fire broke middle of the night Important documents were burnt