விடுதிக்குள் நுழைந்து பள்ளி மாணவர்கள் மீது தாக்குதல் - விசாரணையில் சிக்கிய அமமுக பிரமுகரின் பேரன்.!
five peoples arrested for attack school students in salem
விடுதிக்குள் நுழைந்து பள்ளி மாணவர்கள் மீது தாக்குதல் - விசாரணையில் சிக்கிய அமமுக பிரமுகரின் பேரன்.!
சேலம் மாவட்டத்தில் உள்ள ஏற்காட்டில் பிரபல மான்போர்ட் தனியார் பள்ளியில் கடந்த சில நாடுகளுக்கு முன்பு பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கும், 12-ம் வகுப்பு மாணவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கடம்பூர் பகுதியைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவன் மற்றும் அவரது சக வகுப்பு மாணவர்களை, 12-ம் வகுப்பு மாணவர்கள் சிலர் தாக்கியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து கடம்பூர் பகுதியைச் சேர்ந்த மாணவன், தனது அண்ணனிடம் தகவல் தெரிவித்துள்ளார்.
அதன் படி அண்ணன் மாணிக்கராஜா தனது நண்பர்கள் சிலருடன் பள்ளிக்குள் நுழைந்து 12-ம் வகுப்பு மாணவர்களை சரமாரியாக தாக்கிவிட்டு, வகுப்பறையையும் சேதப்படுத்தியுள்ளார். இந்த தாக்குதலில் இரண்டு 12-ம் வகுப்பு மாணவர்கள் காயம் அடைந்தனர்.
இந்த சம்பவம் குறித்து பள்ளி நிர்வாகம் சார்பில் ஏற்காடு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்தப் புகாரின் படி போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தினர். அதில், அமமுக பிரமுகரின் பேரன் மாணிக்கராஜா மற்றும் அவரது நண்பர்கள் தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது.
இதையடுத்து விசாரணையை தீவிர படுத்திய போலீசார், சம்பவம் தொடர்பாக பாளையங்கோட்டை பகுதியைச் சேர்ந்த ஐயப்பன், துரைராஜ் மற்றும் மாணிக்கராஜா உள்பட ஐந்து பேரையும் கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
English Summary
five peoples arrested for attack school students in salem