சென்னையில் தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்த விமானங்கள் - காரணம் என்ன? - Seithipunal
Seithipunal


சென்னையில் தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்த விமானங்கள் - காரணம் என்ன?

கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் கோடை வெயில் வெளுத்து வாங்கியது. அதிலும் குறிப்பாக சென்னையில் கடுமையான வெயில் வாட்டி வதைத்தது.  இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளானார்கள்.

இந்த நிலையில், சென்னையில் இன்று மாலை ஐந்து மணிக்கு சூறைக்காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இது பொதுமக்களுக்கு மகிழ்ச்சியைத் தந்தாலும் விமானத்தில் பயணம் செய்பவர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது, சூறைக்காற்றுடன் கூடிய மழை பெய்ததால் விமான சேவை பாதிக்கப்பட்டது. அந்தவகையில், சென்னை விமான நிலையத்தில் தரையிறங்க வேண்டிய பெங்களூர், மும்பை, அகமதாபாத், ராய்ப்பூர், ஐதராபாத், தூத்துக்குடி உள்ளிட்ட பதினொரு விமானங்கள் தரையிறங்க முடியாமல் வானத்தில் வட்டமடித்தன. 

இந்த விமானங்கள் சுமார் ஒரு மணி நேரத்திற்கு பிறகு தரையிறங்கின. அதேபோன்று சென்னையில் இருந்து மும்பை, மைசூர், டெல்லி, கொச்சி, கொல்கத்தா உள்ளிட்ட நகரங்களுக்கு செல்ல வேண்டிய 11 விமானங்களும் ஒரு மணி நேரம் வரை தாமதமாக புறப்பட்டுச் சென்றது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

flight service affected by rain in chennai


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->