மக்கள் பணியில் மட்டுமே கவனம் செலுத்துவோம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு..! - Seithipunal
Seithipunal


முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தியின் இல்ல திருமண விழாவில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். அதன்பின்னர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:- 

திருமண விழா என்று விளம்பரப்படுத்தாமல் மண்டல மாநாடு என கூறியிருக்கலாம். மகனின் திருமணம் மூலம் கட்சி வளர்ச்சி, எழுச்சி பெற வேண்டும் என்று இவ்வாறு ஏற்பாடு செய்துள்ளார். திருமண விழாவிற்கு குறிப்பு எடுத்து செல்வது இல்லை. அமைச்சர் மூர்த்தியை பற்றி பேச வேண்டி இருப்பதால் இந்த விழாவிற்கு குறிப்புடன் வந்துள்ளேன். மூர்த்தி பெரிதா ? கீர்த்தி பெரிதா? என கேட்டால் கீர்த்தி பற்றி தெரியல மூர்த்தி தான் பெரியது. 

திமுக எம்எல்ஏக்கள், எம்பிக்கள் மக்களுக்காக ஓயாமல் உழைத்து கொண்டிருக்கிறார்கள். தமிழக மக்கள் நலனுக்காக பகலிரவு பார்க்காமல் உழைத்து கொண்டிருக்கிறோம். உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டத்தின் மூலம் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும். மதுரை மாநகர வளர்ச்சிக்காக பல்வேறு திட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. திமுக மீது நம்பிக்கை வைத்தே மக்கள் வாக்களித்தார்கள். 

மக்கள் நம்பி அளித்த நம்பிக்கைக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றி வருகிறோம். எங்களுக்கு வாக்களிக்காதவர்களுக்கும் பயன்பெறும் வகையில் எங்கள் பணி இருக்கும் என கூறியதுபோல நிறைவேற்றி வருகிறோம் பொய் பிரச்சாரத்தை பற்றி கவலை வேண்டாம், அதனை பற்றி பேச நேரமில்லை. 

மக்கள் பணியில. மட்டுமே கவனம் செலுத்துவோம். திமுக எம்எல்ஏக்கள் எடப்பாடியுடன் பேசுவதாக தெரிவிக்கிறார், அதிமுக எம்.எல்.ஏக்களே அவருடன் பேசுவதில்லை. அவர்களுடைய கட்சியே பிளவுபட்டு போய் இருக்கிறது, எடப்பாடியின் பதவியும் தற்காலிகம் தான் என்று முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

focus only on people's work


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->