கடலூரில் அதிர்ச்சி - கஞ்சா விற்பனை செய்த உணவு டெலிவரி ஊழியர் - பொறி வைத்து பிடித்த போலீசார்.!
food delivery boy arrested for sale drugs in cuddalore
கடலூரில் அதிர்ச்சி - கஞ்சா விற்பனை செய்த உணவு டெலிவரி ஊழியர் - பொறி வைத்து பிடித்த போலீசார்.!
நாட்டில் இருக்கும் இடத்திலிருந்தே அனைத்தையும் தெரிந்துகொள்ளும் அளவிற்கும், பொருட்களை வாங்கும் அளவிற்கும் தொழில்நுட்பம் மிக வேகமாக வளர்ந்து வந்துள்ளது. அதுமட்டுமல்லாமல், தற்போதைய சூழ்நிலையில் வீட்டில் உள்ள அனைவரும் வேலைக்கு செல்கின்றனர்.
அதனால், அவர்கள் வெளியில் செல்வதற்கு நேரம் கிடைப்பதில்லை. அதிலும் குறிப்பாக சமைப்பதற்கு நேரம் கிடைப்பதில்லை. அதனால் மக்கள் உணவை ஆன்லைனில் ஆர்டர் செய்து சாப்பிடுகின்றனர். இதற்காக டெலிவரி பாய்கள் அதிகளவில் பணிபுரிந்து வருகின்றனர்.
ஆனால், இவர்களுக்கு மிகவும் குறைவான சம்பளமே கொடுக்கப்படுகிறது. இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் உள்ள காட்டுமன்னார்கோவிலில் ஆன்லைன் உணவு டெலிவரி செய்யும் ஊழியர் ஒருவர் அப்பகுதியில் உள்ள இளைஞர்களுக்கு கஞ்சா விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அந்த தகவலின் படி போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று கஞ்சா விற்பனை செய்யும் அந்த உணவு டெலிவரி ஊழியரை கையும் களவுமாக பிடித்தனர். அதன் பின்னர் போலீசார் அவரிடம் விசாரணை நடத்தியதில் அவர் பெயர் பத்மநாபன் என்பது தெரிய வந்தது.
மேலும், அந்த நபர் எங்கிருந்து கஞ்சா வாங்குகிறார்? அதனை யாரிடம் விற்பனை செய்கிறார்? என்பது குறித்து விசாரணை செய்து வருகின்றனர். உணவு டெலிவரி செய்யும் ஊழியர் கஞ்சா விற்பனை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
food delivery boy arrested for sale drugs in cuddalore