என்னது!!! வனக்காப்பாளாருக்கு துப்பாக்கி சூடா!!!- காரணம் என்ன? - Seithipunal
Seithipunal


கள்ளக்குறிச்சி சின்னசேலம் அருகே குரால் மற்றும் பாக்கம்பாடி பகுதியைச் சுற்றி வனப்பகுதியுள்ளது. இந்த வனப்பகுதியில் நேற்று இரவு எஸ்.ஐ. தலைமையில் ஒரு குழுவினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அந்த நேரம்  திடீரென நாட்டுத் துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டுள்ளது. சத்தம் கேட்ட இடத்திற்கு சென்று பார்த்தபோது, 3 பேர் dee யில் ஈடுபட்டிருந்த அதிர்ச்சியான விஷயம் தெரிய வந்தது.

இதைத்தொடர்ந்து  வனத்துறையினர் அவர்களை பிடிக்க முயன்றனர். அவர்களில் இருவர் தப்பிச் சென்றனர்,மற்றொருவர் துப்பாக்கியை தூக்கி வீசிவிட்டு ஓட முயன்றுள்ளார். அப்போது அந்த துப்பாக்கியிலிருந்து குண்டு வெளியேறி வேல்முருகன் என்ற வனக்காப்பாளரின் கால் மீது பட்டுள்ளது.

இதில் காயமடைந்த வனக்காப்பாளர் வேல்முருகன் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.தப்பி ஓட முயன்ற அந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரை உளுந்தூர்பேட்டை வனத்துறை அலுவலகத்தில் வைத்து வனத்துறை அதிகாரிகள் மேற்கட்ட விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், தப்பிச் சென்ற இருவரை தேடி வருகின்றனர்.

மேலும் மான்களை வேட்டையாடுவது தவறு என்று தெரிந்தும் இவ்வாறு செய்பவர்களுக்கு தகுந்த தண்டனை வழங்க வேண்டும் என மக்கள் கேட்டுக்கொள்கின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Forest rangers were shot by deer hunter


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->