முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் - நடிகர் ரஜினிகாந்த் திடீர் சந்திப்பு..!
Former Chief Minister O Panneerselvam & Actor Rajinikanth meeting
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் நடிகர் ரஜினிகாந்தை நேரில் சந்தித்துப் பேசியுள்ளார். சென்னை போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்த் இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றதாக கூறப்படுகிறது.

குறித்த சந்திப்பில் இருவரும் புத்தாண்டு வாழ்த்து தெரிவிப்பதற்காக நிகழ்ந்ததாகவும் கூறப்படுகிறது. மரியாதை நிமித்தமாக இந்த சந்திப்பு நடந்தது என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இச்சந்திப்பிற்கு பிறகு நிருபர்களை சந்தித்த பன்னீர்செல்வம் கூறியதாவது: புத்தாண்டை முன்னிட்டு மரியாதை நிமித்தமாக ரஜினியை சந்தித்து வாழ்த்து தெரிவித்தேன். அவர் ஆரோக்கியத்துடன் உள்ளார். என்று கூறியுள்ளார்.
English Summary
Former Chief Minister O Panneerselvam & Actor Rajinikanth meeting