#Breaking:: அடுத்த அதிரடி.. புயலை கிளப்பிய "பாலியல் விவகாரம்".. விசாரணை குழுவில் "லத்திகா சரண்".!!
Former DGP Lathika Charan leads Kalashetra sex complaint
சென்னையில் அமைந்துள்ள கலாஷேத்ரா அறக்கட்டளை கீழ் இயங்கும் கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாக புகார் எழுந்ததை அடுத்து கடந்த சில நாட்களாக மாணவிகள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். மாணவிகளை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கிய பேராசிரியர்கள் ஹரி பத்மன், சஞ்சித்லால், சாய் கிருஷ்ணன், ஸ்ரீநாத் ஆகியோரை பணி நீக்கம் செய்ய வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மாணவிகள் வலியுறுத்தி வந்தனர்.
இந்த விவகாரம் இந்திய அளவில் பேசும் பொருளானது. கல்லூரி மாணவிகள் இரவு பகலாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்ததால் கல்லூரிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்த விவகாரம் தமிழக சட்டமன்றத்திலும் எதிரொலித்ததால் இது குறித்து முழுமையான விசாரணை நடத்தப்படும் எனவும் தற்பொழுது வரை எந்த எழுத்து கூறுக புகார் வரவில்லை எனவும் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் விளக்கம் அளித்து இருந்தார்.
இதற்கிடையே தமிழ்நாடு மகளிர் ஆணையத் தலைவி குமாரி சென்னை திருவான்மியூரில் அமைந்துள்ள கல்லூரியில் உள்ள மாணவிகளிடம் விசாரணை நடத்தினார். இந்த விசாரணையானது 5 மணி நேரம் நடைபெற்ற நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் மாணவிகள் நான்கு பேர் பேராசிரியர் மீது புகார் அளித்துள்ளதாக தெரிவித்திருந்தார்.
இதற்கிடையே கேரளாவைச் சேர்ந்த முன்னாள் மாணவி ஒருவர் ஹரி பத்மன் மீது எழுத்துப்பூர்வமாக புகார் அளித்திருந்தார். இதனைத் தொடர்ந்து பேராசிரியர் ஹரி பத்மனை கைது செய்ய காவல்துறையினர் திட்டமிட்டு இருந்தனர். இதனைத் தொடர்ந்து தலைமறைவாக இருந்த அவரை செல்போன் சிக்னலை வைத்து அவரது தோழி வீட்டில் பதுங்கி இருந்த பொழுது தனி படையினர் கைது செய்தனர்.
இதனைத் தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் தன்மீது புகார் கூறிய அனைவரிடமும் சகஜமாக மட்டுமே பழகினேன் என காவல்துறையினர் வாக்குமூலம் அளித்துள்ளார். இதனைத் தொடர்ந்து எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட ஹரி பத்மன் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் பாலியல் குற்றச்சாட்டு குறித்து விசாரணை அளித்த ஓய்வு பெற்ற நீதிபதி கண்ணன், முன்னாள் டிஜிபி லத்திகா சரண், மருத்துவர் ஷோபா வருத்தமான் ஆகியோர் அடங்கிய விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. மேலும் பாலியல் புகாருக்கு ஆளான பேராசிரியர்களில் ஹரிபத்மன் சஸ்பெண்ட் செய்யப்படுவதாகவும் மற்ற மூன்று உதவி பேராசிரியர்கள் டிஸ்மி செய்யப்படுவதாகவும் கல்லூரி நிர்வாகம் எழுத்துப்பூர்வமாக அறிவித்துள்ளது.
English Summary
Former DGP Lathika Charan leads Kalashetra sex complaint