புழல் சிறையில் அதிகாரியைத் தாக்கிய 4 பெண் கைதிகள் வேறு சிறைக்கு மாற்றம்.!
four female accuests change other jails for attack officer
சென்னையில் உள்ள புழல் பெண்கள் சிறையில் சுமார் இருநூறுக்கும் மேற்பட்ட விசாரணை மற்றும் தண்டனை கைதிகள் உள்ளனர். இந்த சிறையில், கடந்த வாரம் போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது, மூன்று பெண் கைதிகளிடம் இருந்து செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
இதனால், அதிகாரிகள் சிறையில் அதிக கெடுபிடி காட்டுவதாக கூறி நேற்று சிறை துணை அலுவலர் வசந்தி என்பவரை பெண் கைதிகள் ஒன்பது பேர் ஒன்று சேர்ந்து அவரைத் தாக்கியதுடன், அவருக்கு கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர்.
மேலும் சிறையில் உள்ள டியூப் லைட்டுகள் மற்றும் ஜன்னல் கண்ணாடிகளையும் அடித்து நொறுக்கி ரகளையில் ஈடுபட்டனர். இது தொடர்பாக சிறை துணை அலுவலர் வசந்தி, புழல் போலீசில் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரின் படி,தலைமை காவலர் சண்முகம் சிறையில் ரகளையில் ஈடுபட்ட ஒன்பது பெண் கைதிகள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
இந்த சம்பவம் தொடர்பாக சிறை உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்ததன் படி, பெண் கைதிகளில் நான்கு பேரை உடனடியாக வேறொரு சிறைக்கு மாற்றப்பட்டனர். இந்த சம்பவத்தால் பெண்கள் சிறையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
English Summary
four female accuests change other jails for attack officer