ஆசிரியர் தகுதித் தேர்வு : தமிழகத்தில் 14 சதவீதம் பேர் தேர்ச்சி.!
fourteen percentage peoples passed teacher eligibility test in tamilnadu
தமிழகத்தின் ஆசிரியர் தேர்வு வாரியம் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் தெரிவித்திருப்பதாவது:- நாடு முழுவதும் கடந்த 2010ம் ஆண்டு முதல் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்பட்டு, அந்த தேர்வில் தேர்ச்சி பெறும் நபர்கள் பள்ளிகளில் ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டு வருகின்றனர்.
அதன் படி, தமிழகத்தில் இந்த ஆண்டுக்கான தேர்வு கடந்த அக்டோபர் மாதம் 14-ம் தேதி முதல் 19ம் தேதி வரை நடத்தப்பட்டது. அதில், தாள் ஒன்றில் 1 லட்சத்து 53 ஆயிரத்து 233 பேர் எழுதியுள்ளனர்.
இதற்கான முடிவுகள் கடந்த 7-ம் தேதி தேர்வு வாரிய இணையதள பக்கத்தில் வெளியானது. இந்த முடிவில் மொத்தம் 21 ஆயிரத்து 543 பேர் இடைநிலை ஆசிரியர் பணிக்கு தகுதி பெற்றுள்ளனர்.
இது நூறு சதவீதத்தில் 14 சதவீதம் ஆகும். மேலும் தேர்ச்சி பெற்றவர்கள், அதற்கான சான்றிதழை, டி.ஆர்.பி.,யின், http://trb.tn.nic.in/ என்ற இணையதளத்தில், மூன்று மாதம் வரை பதிவிறக்கம் செய்யலாம்.
இதையடுத்து விண்ணப்பதாரர்கள், விண்ணப்பத்தில் திருத்தம் செய்வதற்கு, ஏற்கனவே கால அவகாசம் வழங்கப்பட்டது. ஆகவே, தற்போது திருத்தம் செய்வதற்கான கோரிக்கையின் மீது, எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது" என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
fourteen percentage peoples passed teacher eligibility test in tamilnadu