லட்ச கணக்கில் மோசடி! போலியான பணி ஆணை! முக்கிய அதிகாரி அதிரடி கைது!
Fraud How was the Panchayat Union assistant director arrested
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பஞ்சாயத்து அலுவலகத்தில் உதவி இயக்குனராகப் பணிபுரிந்து வருபவர் மனோ.
கோத்தகிரி ஒரசோலைப் பகுதியைச் சேர்ந்தவர் இவர், பத்துக்கும் மேற்பட்ட நபர்களிடம் இருந்து பணத்தைப் பெற்றுக் கொண்டு போலியான பணி ஆணைகளை வழங்கியது தொடர்பாக தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
நடவடிக்கை:
இவர் மொத்தம் 51 லட்சம் ரூபாய் வரைப் பணத்தை அந்நபர்களிடமிருந்து வாங்கியுள்ளார். இதைத்தொடர்ந்து நேற்று நடைபெற்ற மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யாவிடம் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்துள்ளனர்.
மேற்படி, இந்தப் புகாரின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என். எஸ்.நிஷா உத்தரவின் பேரில் உதவி பஞ்சாயத்து யூனியன் உதவி இயக்குனர் 'மனோ' கைது செய்யப்பட்டு உள்ளார்.
குற்றப்பிரிவு:
இதுகுறித்து, குற்றப்பிரிவு காவல் துறையினர்த் தொடர்ந்து மனோவிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றன. இச்சம்பவமானது அப்பகுதியில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், இது போன்ற செயல்களை அரசு அதிகாரிகள் செய்யாமல் இருக்க ஆட்சியர் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் சொல்லப்படுகிறது.
லஞ்சம் கொடுப்பதும் வாங்குவதும் தவறு என்ற முறையில் லஞ்சம் வாங்கிய நபர்களை மட்டும் குற்றம் சொல்லாமல் கொடுத்தவர்களையும் கைது செய்ய ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
English Summary
Fraud How was the Panchayat Union assistant director arrested