கல்யாணம் ஆனாலும், கிரிக்கெட் விளையாட அனுமதிக்க வேண்டும்.. பரிசுக்கு பதிலாக பத்திரத்தை கொடுத்த நண்பர்கள்..! - Seithipunal
Seithipunal


திருமணம் முடிந்த உடன் நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாட முடியாது, டூர் போக முடியாது என்பதே பல ஆண்களின் கவலையாக இருக்கும். திருமணம் அவர்களின் பொறுப்புகளை அதிகரிக்க செய்கிறது என்பதும் அவர்களது கருத்தாக உள்ளது. இந்நிலையில், மணப்பெண்ணிடம்  பத்திரத்தில் கையேழுத்து வாங்கிய சம்பவம் அரங்கேறியுள்ளது.

மதுரை மாவட்டம், உசிலம்பட்டியை சேர்ந்தவர் ஹரிபிரசாத். இவருக்கு பூஜா என்ற பெண்ணுடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இன்று திருமணம் நடந்துள்ளது. திருமணத்திற்கு வந்த ஹரிபிரசாத்தின் நண்பர்கள் பரிசிற்கு பதிலாக மணமகளிடம் பத்திரத்தை நீட்டியுள்ளனர். இதனை  கண்டு குழப்பமடைந்த அவர் பத்திரத்தை படித்துள்ளார். அந்த பத்திரத்தில்  பூஜா ஆகிய நான் ஸ்டார் அணியின் கேப்டனும் எனது கணவருமான ஹரிபிரசாத்தை வார இறுதிகளில் கிரிக்கெட் விளையாட அனுமதிக்கிறேன் என எழுதியிருந்தனர்.

இந்த பத்திரத்தை படித்து பார்த்த மணப்பெண் பத்திரத்தில் கையெழுத்திட்டார். மணமக்களுக்கு பரிசளிப்பதற்கு பதிலாக அவரிடம் பத்திரத்தில் கையெழுத்து வாங்கி சம்பவம் அங்கு வந்திருந்தவர்களை ஆச்ரியத்தில் ஆழ்த்தியது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Friends give a bond to bride for allowing his husband to playing cricket


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->