அரசு பேருந்து நடத்துனர்களுக்கு பரிசுத் தொகை - இதை மட்டும் பண்ணுங்க.!
gift to govt bus conductors for sell most tickets on upi
தமிழக அரசு விரைவு போக்குவரத்துக் கழக பேருந்துகளில் கடந்த ஏப்ரல் 1ம் தேதி முதல் மின்னணு பயணச்சீட்டு இயந்திரம் மூலம் பயணச்சீட்டு வழங்கப்பட்டு வருகிறது.
இந்த வசதி தற்போது குறிப்பிட்ட அரசு விரைவு போக்குவரத்து கழகப் பேருந்துகளில் மட்டும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதன் படி பயனர்கள் கூகுள் பே, போன் பே போன்றவற்றில் மூலம் பணம் செலுத்தி பேருந்துகளில் பயணச்சீட்டு பெற்றுக்கொள்ளலாம்.
இந்த நிலையில், பயணிகளிடம் டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் பேருந்து நடத்துநர்களுக்குப் பரிசு வழங்கப்படும் என்று அரசு விரைவு போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார்.
அந்த சுற்றறிக்கையில், "அரசு பேருந்துகளில், ஒவ்வொரு மாதமும் அதிகபட்சமான மின்னணு பணப் பரிவர்த்தனை எண்ணிக்கை மூலம் பயணிகளுக்குப் பயண சீட்டு வழங்கும் நடத்துநர்களுக்குப் பரிசுத்தொகை மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும்" என்றுத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
gift to govt bus conductors for sell most tickets on upi