இரும்பு கேட் விழுந்து சிறுமி பலி - சென்னையில் பயங்கரம்..!
girl died in chennai for gate collapse
அடுக்குமாடி குடியிருப்பின் இரும்பு கேட் சரிந்து விழுந்ததில் சிறுமி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை நங்கநல்லூர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசிப்பவர் சம்பத். இவர் மகள் ஐஸ்வர்யா. இந்த நிலையில், நேற்று சம்பத், பள்ளி முடிந்ததும் தனது மகள் ஐஸ்வர்யாவை இருசக்கர வாகனத்தில் அழைத்து வந்துள்ளார்.

அதன் படி அவர்கள் வீடு திரும்பியதும், அடுக்குமாடி குடியிருப்பின் கேட்டை சிறுமி ஐஸ்வர்யா மூடியுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக இரும்பு கேட் சிறுமி மீது சரிந்து விழுந்தது. இதைப்பார்த்த தந்தை சம்பத் மற்றும் அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து உடனடியாக கேட்டை தூக்கி சிறுமியை மீட்டனர்.
இந்த விபத்தில் படுகாயமடைந்த சிறுமி ஐஸ்வர்யா மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், அங்கு அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர் தெரிவித்தார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
girl died in chennai for gate collapse