என் குழந்தையை கையில் கொடுங்கள்....கதறும் தாய்....சென்னையில் நிகழ்ந்த சோகம்! - Seithipunal
Seithipunal


சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள  நீச்சல் குளத்தில், இரண்டு வயது சிறுவன் ரித்தீஷ் எதிர்பாராத விதமாக தவறி விழுந்துள்ளார்.  இதையடுத்து குழந்தையை மீட்ட அவரது பெற்றோர்கள், ஈஞ்சம்பாக்கம் அருகே இருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, அந்த மருத்துவமனையில் போதுமான வசதி எதுவும் இல்லாததால் குழந்தைக்கு முதலுதவி சிகிச்சை மட்டுமே அளிக்கப்பட்டுள்ளது.

பின்னர் குழந்தையை தனியார் மருத்துவமனைக்கு அனுமதித்தனர். அப்போது குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.அப்போது குழந்தையின் தாய், “என் குழந்தையை கையில் கொடுங்கள்” எனக்கூறி கதறிய காட்சி காண்போரை கண்கலங்க செய்தது.

இந்நிலையில், அரசு மருத்துவமனையில் போதிய வசதிகள் ஏதும் இல்லாததால்  முதலுதவி சிகிச்சை மட்டுமே அளிக்கப்பட்டதாகவும், இதனால் பலரும் பாதிக்கப்படுவதாக உறவினர்கள் குற்றம் சாட்டினர்.

மேலும், ஈஞ்சம்பாக்கம், ஈசிஆர் திருவான்மியூர் உள்ளிட்ட பகுதிகளில் தினமும்  விபத்துக்கள் நடைபெறும் நிலையில், விபத்தில் காயமடைந்தவர்களை சென்னை ராயப்பேட்டை, அரசு ராஜீவ் காந்தி மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது. எனவே  இந்த பகுதியில் உயர்தர சிகிச்சை அளிக்கக்கூடிய மருத்துவமனை ஒன்றை கட்டித்தர அரசு முன்வர வேண்டும் என்று  கோரிக்கை விடுத்துள்ளனர். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Give my child in hand Screaming mother Tragedy in Chennai


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->