காஞ்சிபுரத்தில் இருந்து அமெரிக்கா செல்லும் தங்கத்தேர்.!
gold chariat to america from kanchipuram
கோவில் நகரம் என்று அழைக்கப்படும் காஞ்சிபுரத்தில் செயல்படும் ராஜா ஆன்மிகம் எனும் தனியார் நிறுவனம் கோவில்களுக்கு தேவையான வாகனம், கொடிமரம் தங்க வெள்ளி கவசங்கள், பஞ்சலோக சிலைகள் மற்றும் பூஜை பொருட்கள் மேளதாளங்கள் உள்ளிட்டவற்றை தயாரித்து, உள்நாடு, வெளிநாடு, கோவில்களுக்கு விற்பனை செய்கிறது.
இந்த நிலையில், இந்த தனியார் நிறுவனத்திடம் அமெரிக்காவில் உள்ள வாஷிங்டன் மாகாணத்தை சேர்ந்த சியாட்டின் நகரத்தின் அருகில் ரெட்மண்டில் அமைந்துள்ள வேதிக் கோவில் நிர்வாகம் தங்கத்தேர் ஒன்றை செய்து தரும்படி கேட்டுக்கொண்டது.
அதன்படி முதல் முறையாக ராஜா ஆன்மிகம் நிறுவனம் மரங்களை பயன்படுத்தாமல் முழுக்க முழுக்க இரும்பு ஆங்கிள்களை பயன்படுத்தியும் 6 பகுதிகளாக பிரித்து எடுத்து செல்லும் வகையில் செப்பு தகடுகளில் சிற்பங்களை செதுக்கி தங்க முலாம் பூசி, தங்கத்தேரை செய்து முடித்துள்ளது.
இந்தத் தேரில் 8 கருடன்கள், 16 கந்தர்வர்கள், சூரிய பகவான் 2 குதிரைகள் உள்ளிட்ட அழகிய வடிவிலான சிலைகளையும் பொருத்தி உள்ளனர். பழமையை மாற்றாமல் 23 அடி உயரத்துடனும் 3½ டன் எடையுடன் ரூ.1¼ கோடி மதிப்பீட்டில் 75 நாட்களில் தயார் செய்து முடித்துள்ளது.
இந்தத் தேர் இன்னும் சில நாட்களில் 6 பகுதிகளாக விமானம் மூலம் அமெரிக்காவுக்கு அனுப்பப்பட உள்ளது. அதற்கான பணி நடைபெறுவதாக தனியார் நிறுவனத்தின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
English Summary
gold chariat to america from kanchipuram