திடீர் சோதனை! திருச்சி விமான நிலையத்தில் சிக்கிய முக்கிய புள்ளி! ரூ.1.16 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல்! - Seithipunal
Seithipunal


திருச்சி விமான நிலையத்தில் சிங்கப்பூரிலிருந்து​ கடத்திவரப்பட்ட ரூ.1.16 கோடி மதிப்பிலான தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

திருச்சி விமான நிலையத்தில் இருந்து பல்வேறு மாநிலங்களுக்கும் மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட பல்வேறு வெளிநாடுகளுக்கும் இங்கிருந்து விமான சேவைகள் இயக்கப்பட்டு வருகிறது. அதில் லட்சக்கணக்கான பயணிகள் தினதோறும் பயணம் செய்கிறார்கள்.

இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் தொடர்ந்து வெளிநாடுகளில் இருந்து தங்கம், போதை பொருள் உள்ளிட்ட பொருட்களை கடத்தி வருவது தொடர்ந்து நடந்து வருகிறது. சமீப நாட்களாக தொடர்ந்து இது போன்ற சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.

வெளிநாடுகளில் விலை குறைவாக விற்கப்படும் தங்கங்களை இந்தியாவிற்கு கள்ளத்தனமாக கொண்டு வந்து அதிக விலைக்கு விற்கும் கும்பல் தொடர்ந்து வான்வழி விமானம் வழியாக தங்கங்களை கடத்தி வருகின்றன.

இந்த நிலையில், சிங்கப்பூரிலிருந்து நேற்று ஸ்கூட் விமானம் திருச்சி விமான நிலையம் வந்தது. விமானத்தில் வந்த பயணிகளின் உடமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அப்போது சந்தேகம் அளிக்கும் விதமாக பயணி ஒருவரின் உடமைகளைசோதனை செய்தனர். அப்போது அவர் தனது காலில் அணிந்திருந்த மூட்டு வலி பட்டையில் ரூ.1.16 கோடி மதிப்பிலான 1605 கிராம் தங்கம் மறைத்து எடுத்து வந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து தங்கம் கடத்தி வந்த நபரை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். கடத்தி வரப்பட்டது தங்கத்தையும் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Gold worth 1 crore seized at Trichy airport


கருத்துக் கணிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுகவின் வாக்குகள் யாருக்கு செல்லும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுகவின் வாக்குகள் யாருக்கு செல்லும்?




Seithipunal
--> -->